தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 955

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல ஊர்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 8 செ.மீட்டரும், கேளம்பாக்கத்தில் 7 செ.மீட்டரும், சோழவரத்தில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு அப்பால் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல ஊர்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 73.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments