சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான், பாகிஸ்தானில் இன்று, சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இருநாட்டு நல்லுறவை மேம்படுத்த இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. இப்பயணத்தின் போது சேக் முகமது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து சில உடன்பாடுகள் இந்த சந்திப்பில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அபுதாபி இளவரசர் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போது பாகிஸ்தானுக்கு 300 கோடி டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டது. பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசரின் வருகை நிதியுதவியை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Comments