புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போப்பின் கையைப் பிடித்து இழுத்த பெண்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்ணின் கையை தட்டி விட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார்.
வாடிகன் நகரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது போப் மக்களை நேரடியாகச் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பெண் ஒருவர் ஆர்வமிகுதியால் போப்பின் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் நிலைகுலைந்த போப், அந்தப் பெண்ணிக் கையைக் கோபத்துடன் தட்டி விட்டார்.
இந்நிலையில் புத்தாண்டு சிறப்புச் சொற்பொழிவில் பேசிய போப் பிரான்சிஸ், குறிப்பிட்ட பெண்ணிடம் தான் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக்கூடாது என்று கூறிய அவர், அதீத அன்பு நம்மை நோயாளியாக்கி விடுவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் அந்தப் பெண்ணிடம் கோபமாக நடந்து கொண்டது மோசமான நடத்தை என்று கூறிய அவர், கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.
Comments