கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பிரதமர் பங்கேற்பு
கர்நாடகாவில், இன்றும் நாளையும் என, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி இன்று கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
அதையடுத்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, சாதனை படைத்த விவசாயிகளுக்கு கிருஷிக் கர்மான் விருதுகளை பிரதமர் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் பிரதமர் விவசாய சம்மான் நிதியில் இருந்து மூன்றாவது தவணையை பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார். இந்த நிதியால் சுமார் 6 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள்.
பல்வேறு மாநில அளவில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்குவார்.
பின்னர் பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டி.ஆர்.டி.ஓ. வின் 5 இளம் விஞ்ஞானிகளுக்கு மோடி விருதுகள் வழங்கி கௌரவிக்க உள்ளார்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் சபையின் இளம் விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் விஞ்ஞானிகள், அறிவியல் ஆய்வாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
Comments