நெட் தேர்வில் உதவி பேராசிரியர் பணிக்கு 60,147 பேர் தேர்ச்சி
நெட் தேர்வில் 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ நடத்தி வந்த இந்த தேர்வை கடந்த ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டிற்கான நெட் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 219 நகரங்களில் 700க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வில் 7 லட்சத்து 93 ஆயிரம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.
அதன் முடிவு https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியாகியது. அதில் 60 ஆயிரத்து 147 பேர் உதவிப்பேராசியர் பணிக்கும், ஐந்தாயிரத்து 92 பேர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி பெற்றதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
Comments