2019-20 நிதியாண்டில் டிசம்பரில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,03,184 கோடி வருவாய்
ஜிஎஸ்டி வரி வருவாய் டிசம்பர் மாதத்தில் மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாயாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 184 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜிஎஸ்டி மூலம் 19 ஆயிரத்து 962 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி மூலம் 26 ஆயிரத்து 792 கோடி ரூபாயும் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ள நிதியமைச்சகம், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் 48 ஆயிரத்து 99 கோடி கோடி ரூபாயும், செஸ் வரியின் மூலம் 8 ஆயிரத்து 331 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 94 ஆயிரத்து 726 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வருவாய் கிடைத்ததாகவும், அத்துடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகம் என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.
Comments