காவலன் செயலியை ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்

0 787

ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள், பாதுகாப்பிற்கு காவலன் செயலியை பயன்படுத்தும்படி தமிழக இருப்புப்பாதை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இருப்புப்பாதை காவல்துறை ஆற்றிய சேவைகளை விளக்கி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உதவி மைய எண் 1512 மற்றும் தொலைதொடர்பு எண் 9962500500 ஆகியவை பயணிகளுக்கு தெரியும் வண்ணம் அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த உதவி எண்களை பயன்படுத்தி ரயில்நிலையங்களில் நடைபெறும் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க இருப்புப்பாதை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments