திருப்பதியில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில், மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், மூத்த குடிமக்கள் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கூட்டத்தால் பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் வருடக் கடைசி நாளான நேற்று 78 ஆயிரத்து 460 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 76 லட்சம் ரூபாய் செலுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments