லிப்ட் அறுந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

0 1079

மத்தியப்பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது லிப்ட் அறுந்து விழுந்ததில் கட்டுமான நிறுவன அதிபரும் அவரது குடும்பத்தினரும் என 6 பேர் உயிரிழந்தனர்.

பிஏடிஎச் இந்தியா எனும் பிரபல கட்டுமான நிறுவன அதிபர் புனீத் அகர்வால், இந்தூர் அருகே படல்பானி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்கும் பொருட்டு, கட்டுமானத்துக்காக வீட்டின் வெளிபுறம் அமைக்கப்பட்ட லிப்டில் ஏறி மேலே சென்றதாகவும் கூறப்படுகிறது.

அப்போது லிப்ட் திடீரென 70 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்ததில் அதில் இருந்த புனீத் அகர்வால், அவரது மகள், மருமகன், பேரன் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments