இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் - ராணுவ தளபதி எம்.எம். நரவானே
பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒரு புறம் இருந்தாலும் இனிமேல், இந்திய ராணுவம் சீன எல்லையில் அதிக கவனம் செலுத்தும் என்று ராணுவ தளபதி எம்.எம். நரவானே தெரிவித்திருக்கிறார்.
இந்திய ராணுவத்தின் 28 ஆவது தளபதியாக பொறுப்பேற்ற நரவானே, டெல்லி இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சிறிது நேரம் உரையாடிய அவர், சீன எல்லையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். எந்த விதமான சூழலிலும் நாட்டை காக்கும் பணியில் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பதே திட்டம்.
ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அவர், மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க ராணுவம் அறிவுறுத்தப்படும். மனித உரிமைகளை மதிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம்.
தீவிரவாதிகள் பிரச்னை தொடர்ந்தால், எங்கிருந்தாலும் அவர்களை தாக்குவதற்கான முழு உரிமை இந்தியாவுக்கு உள்ளது என குறிப்பிட்டார்.
Comments