"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மகப்பேறு கால சிகிச்சை முறையை கர்ப்பிணி பெண்கள் அறிய புதிய செயலி விரைவில் அறிமுகம்
மகப்பேறு கால சிகிச்சை குறித்து கர்ப்பிணி பெண்கள் அறிந்து கொள்ள மெடர்னிட்டி டாஷ் போர்டு (maternity dash board) எனும் புதிய செயலியை சுகாதாரத் துறை விரைவில் வெளியிடவுள்ளது.
குறை பிரசவமாகவும், எடை குறைவாகவும் பிறந்த 13 குழந்தைகள், எழும்பூரிலுள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் தேறின.
அக்குழந்தைகளின் தாயார் உள்ளிட்டோர் ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி இன்று கொண்டாடினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை இயக்குநர் விஜயா, அரசு மருத்துவமனைகளில் பெயரை பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்கள், மகப்பேறு காலத்தில் பெற வேண்டிய சிகிச்சை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியை விரைவில் வெளியிடப்பட இருப்பதாக கூறினார்.
Comments