சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் கோலாகலம்
பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படும் இவ்வாலயத்தில், சிவபெருமான், திருவாதிரை நாளில் தனது ஆனந்த திருநடனக் காட்சியை, பதஞ்சலி முனிவருக்கு அருளியதாக ஐதீகம் கூறப்படுகிறது.
இதுவே ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது. 10 நாட்கள் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை, நடராஜர் - சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு, பின்னர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவ, சிவ கோஷத்துடன் தரிசித்தனர். வரும் 9 ந்தேதி தேரோட்டமும், 10 ந் தேதி மதியம் 1 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments