பாக்தாத் தூதரக தாக்குதல்-ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

0 845

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையான கத்தேப் ஹிஸ்புல்லாவின் 25 பேரை அமெரிக்க விமானப்படை குண்டு வீசி கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈராக் தலைநகர் பாக்தாதின் உச்சபட்ச பாதுகாப்புப் பகுதியில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது.

இந்த  தாக்குதலில், அமெரிக்க தூதரக அதிகாரிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள டிரம்ப், தூதரக சொத்துகளுக்கோ, அதிகாரிகளுக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் எச்சரித்துள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து  பாக்தாத் தூதரகத்திற்கு கூடுதல் அமெரிக்க பாதுகாப்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments