ஒன்பது வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது

0 662

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

திருச்செந்தூர்

திருச்செந்தூரை அடுத்த ஆழ்வார்திருநகரி ஒன்றியம் நாலுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் வாக்குச்சீட்டில் ஒன்பது சின்னங்கள் இடம்பெற்றன. இதையடுத்து நாலுமாவடி ஊராட்சிக்கு உட்பட்ட 5 வாக்குச் சாவடிகளிலும் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தேனி

தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் கடந்த 30-ஆம் தேதி 8-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்ட நான்கு பேரில் ஒருவரான ராசுவின் சின்னமும் பெயரும் வாக்குச் சீட்டில் விடுபட்டதால் மறுவாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வாக்காளர்களின் ஆட்காட்டி விரவில் மை இருப்பதால் நடு விரலில் மை வைக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெறுகிறது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

கடலூர்

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மோகனா என்ற வேட்பாளரின் கார் சின்னம் வாக்குச் சீட்டில் விடுபட்டது. இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டு இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments