கோவில்களில் புத்தாண்டு வழிபாடு..!

0 1415

புதிதாக பிறந்துள்ள புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’ஐ வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்ததாண்டு பிறந்ததும், வாணவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டங்கள் களைகட்டின. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

புதிய வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம், இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என இறைவனை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது வடமாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், தீர்த்தங்களிலும் புனித நீராடி, பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழநி முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகன் - தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

திருத்தணி முருகன்கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் விடிய விடிய மலைக் கோயில் மாட வீதிகளில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

 

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் ஆலயத்தில், புத்தாண்டையொட்டி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், காமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவிலிலும், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கு இன்று காலை ஆரத்தி வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். மும்பை சித்திவிநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டு, புத்தாண்டு சிறக்க பிரார்த்தனை மேற்கொண்டனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் பங்கேற்றனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள சுயம்பு விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சிவலிங்கம் அமைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்வது போல செயற்கையாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments