விமானப் படையில் இணைந்தது "டோர்னியர்-228"
"டோர்னியர்-228" போர் விமானம், விமானப்படையின் 41-ஆவது பிரிவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய டோர்னியர் ரக போர் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது.
அந்நிறுவனத்திடமிருந்து 14 போர் விமானங்களை ஆயிரத்து 90 கோடியில் வாங்க இந்திய விமானப்படை கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதலாவது "டோர்னியர்-228" போர் விமானம் கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியிலுள்ள பாலம் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த போர் விமானம், 41-ஆவது விமானப்படைப் பிரிவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கலந்துகொண்டார்.
Comments