வருவாய் குறைவால், சிக்கன நடவடிக்கைகளில் மத்திய அரசு

0 912

வருவாய் குறைவு காரணமாக செலவைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சரக்கு-சேவை வரி வருவாய், 3 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 40 சதவீதம் குறைவாகும்.

வருமான வரி வருவாயும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாகவே உள்ளதால், நடப்பு நிதியாண்டில் கடைசி காலாண்டான, ஜனவரி முதல் மார்ச் வரை செலவைக் குறைக்குமாறு மத்திய அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், அமைச்சகங்கள் தங்களுக்கான பட்ஜெட் மதிப்பீட்டுத் தொகையில் 33 சதவீதத்தை செலவிடலாம் என்ற உச்சவரம்பு தற்போது 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 18 சதவீதம் பட்ஜெட் மதிப்பீட்டுத் தொகையை செலவிடலாம் என்ற உச்சவரம்பு, தற்போது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments