9 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு

0 905

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் சில வாக்குச் சாவடிகளில், வாக்குச் சீட்டுகள் மாற்றி வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தூத்துக்குடி நாலுமாவாடி ஊராட்சியில் 5 வாக்குச்சாவடிகள், கடலூர் விலங்கல்பட்டு, நாகை மாவட்டம் தாணிகோட்டகம், தேனி மாவட்டம் உப்புக்கோட்டை, மதுரை மாவட்டம் வஞ்சிநகரம் ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments