ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதியில் ஆய்வு

0 699

மத்திய நீர்வள பாதுகாப்பு ஆணையத்தின் அணைகள் ஆய்வுக்குழு இணை செயலாளர் நீவா சிங், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பாரம்பரிய நீர் நிலைகள், நீர் ஆதாரங்களைப் புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் உள்ளிட்ட 5 குறிக்கோள்களை மையமாகக் கொண்டு ஜல் சக்தி அபியான்  திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 255 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு குழுக்கள் மூலம் நீர் மேலாண்மை பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னை வந்துள்ள,  மத்திய நீர்வள பாதுகாப்பு ஆணையத்தின் அணைகள் ஆய்வுக்குழு இணை செயலாளர் நீவா சிங், பள்ளிகரணை சதுப்பு நிலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அணைகள் ஆய்வுக்குழு இணை செயலாளர் நீவா சிங், ஜல் சக்தி அபியான் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT