மக்களவையில் நள்ளிரவு 12 மணி வரை நீடித்த விவாதம்

0 1183

நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

ரயில்வேயில் தனியார் பங்களிப்புக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெரியார் பெயரை சூட்ட வேண்டும் என்று திமுக உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்தார். புல்லட் ரயில் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளுடன் நள்ளிரவு 12 மணிக்குப் பின் மக்களவையில் விவாதம் நிறைவு பெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே இணை அமைச்சர் எஸ்.அங்காடி ரயில்வேயை மேம்படுத்த அனைத்து உறுப்பினர்களும் சிறப்பான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியாவின் சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததை நினைவுகூர்ந்த அவர், பிரதமர் மோடியின் ஆட்சி ரயில்வேயை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT