இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை

0 229

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ள அமெரிக்க வர்த்தகப்பிரதிநிதி கிறிஸ்டோபர் வில்சன் தலைமையிலான அதிகாரிகள் குழு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று சந்திக்க உள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது வரிதொடர்பாக அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. ஜி 20 மாநாடுக்கு இடையே அமெரிக்க  அதிபர் டிரம்ப்பை சந்தித்த பிரதமர் மோடி, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு குறித்த அமெரிக்காவின் புகாரை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கமுடியும் என்று தெரிவித்திருந்தார்.

இதனை டிரம்ப்பும் ஏற்றுக் கொண்டார். நேற்று இருதரப்பு அதிகாரிகளும் சம்பிரதாயமான சந்திப்புகளை நடத்தி விவாதிக்கவேண்டிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளனர். இதையடுத்து இன்றைய பேச்சுவார்த்தையில் இணையவழி வர்த்தகம், ஏற்றுமதி தொடர்பான நடைமுறைகள் என பலவகை முக்கியப் பிரச்சினைகள் குறித்து  விவாதிக்கப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT