தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

0 391

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்தில்,  லேசானது முதல் மிதமானது மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பான, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி,  திண்டுக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும்,  அடுத்த 24 மணி நேரத்தில்,  வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமானது வரையில், மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாளாவில் 5 சென்டி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், சென்னையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT