வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது

0 669

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு ஆட்சியரகத்தைச் சுற்றிலும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேட்புமனுத் தாக்கலின் தொடக்க நாளான இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியுடன் சென்ற அவர், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் தமது மனுவை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT