கோவாவிலும் காங்கிரசுக்கு பின்னடைவு

0 1619

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி போராடி வரும் நிலையில், கோவாவில் அந்த கட்சி எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

கோவாவில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும், ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகர் ராஜேஷ் பட்நேகரை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 10 பேரும் ஆளும் பாஜகவில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் முன்னிலையில் இணைந்தனர்.

பாஜகவில் 10 எம்எல்ஏக்கள் இணைந்துள்ளால் 40 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 27 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தெரிவித்தார். எந்த வித நிபந்தனையும் இன்றி அவர்கள் 10 பேரும் தங்களது கட்சியில் இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

15 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT