மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

0 389

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழக அரசின் இசைவின்றி கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆற்றுப் பள்ளத் தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்கள் தொடர்பான மதிப்பீட்டுக் குழுவின் கூட்டதில் மேகதாது திட்டம் தொடர்பான புதிய வரைவு விதிகளுக்கு ((Fresh Terms of Reference)) ஒப்புதல் வழங்கும் நிகழ்ச்சி நிரலும் இடம்பெற்றிப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது என்று கூறியுள்ள அவர் மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு உறுதியான எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே கர்நாடகாவின் புதிய வரைவு விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதைத் தடுக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். தமிழகத்தின் ஒப்புதல் இன்றி எந்த திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT