மழை குறுக்கிட்டதால் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி ஒத்திவைப்பு....

0 4652

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் மழை குறுக்கிட்டதால் ஒத்திவைக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 46.1வது ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நடுவர்களும், வீரர்களும் நீண்ட நேரம் காத்திருந்தும், மழை விடாததால் ஆட்டத்தை இன்று தொடருவது என முடிவெடுக்கப்பட்டது.

image

நியூசிலாந்து அணி எஞ்சிய 23 பந்துகளை சந்தித்தபின் இந்திய அணி பேட் செய்யும். ஒருவேளை இன்றும் மழை நீடிக்கும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்புக் கிடைக்கும்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT