இம்ரான் கானை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

0 2053

ரவீந்திரநாத் தாகூரின் மேற்கோளைப் பயன்படுத்தி, அதற்கு லெபனான் கவிஞர் கலீல் ஜிப்ரானின் பெயரைப் போட்டதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது இணையவெளியில் கடுமையான விமர்சனங்களும் கிண்டல்களும் பதிவாகியுள்ளன.

தமது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கில் மேற்கோள் ஒன்றை இம்ரான் கான் பதிவிட்டார். வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று இரவில் கனவு கண்டேன், ஆனால் விழித்துப் பார்த்த போது வாழ்க்கை ஒரு சேவை என்பதை புரிந்துக் கொண்டேன். சேவையே மகிழ்ச்சி என்பதை நான் உணர்ந்தேன்- என்ற கவிதை வரிகளை பதிவிட்ட இம்ரான் கான் இவை நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு சொந்தமான கவிதை வரிகள் என்று போடாமல் கலீல் ஜிப்ரானின் பெயரை போட்டு விட்டார்.

யாருடைய கவிதை என்ற பெயரை சரிபார்க்காமல் இப்படி இம்ரான் கான் சொதப்பலாமா என்று இணையத்தில் பலர் பதிவுகளைப் போட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT