ரவுடிகளுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்தவனை போலீசார் தேடுகின்றனர்

0 352

சென்னை எண்ணூரில், துப்பாக்கியுடன் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த சையது என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை எண்ணூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், அண்மையில் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், எண்ணூரை சேர்ந்த ரவுடி பி.டி. ரமேஷ் என்பவனின் துப்பாக்கியை பயன்படுத்தி, அலெக்சாண்டர் என்ற மற்றொரு ரவுடி சுட்டதாக தெரிவித்தார். அதன்பேரில், வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், ரவுடி பி.டி. ரமேஷ், அலெக்சாண்டர் ஆகிய இருவரையும் கைது செய்து 2 தோட்டாக்களுடன் துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கைதான ரவுடி பி.டி.ரமேஷிடம் விசாரித்ததில், சையது என்ற ரவுடி மூலம் துப்பாக்கியை வாங்கியதும், இதுபோல் மேலும் பல சென்னை ரவுடிகளுக்கு சையத், மும்பையிலிருந்து புரோக்கர் மூலம் துப்பாக்கிகளை வாங்கி சப்ளை செய்ததும் தெரிந்தது. ரவுடி சையதை கைது செய்யும் முனைப்பில் இறங்கியுள்ள போலீசார், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT