முறையாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து தி.மு.கவினர் போராட்டம்

0 433

கோவையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, மாநகராட்சி அலுவலகம் எதிரே தி.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சீரான குடிநீர் வழங்க வேண்டும், பிரான்ஸின் சூயஸ் நிறுவனத்துடன் குடிநீர் விநியோகம் தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காலி குடங்களுடன் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால், அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT