கடந்த 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டுகளில் செய்துள்ளோம் - நடிகர் விஷால்

0 430

நடிகர் சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டுகளில் செய்துள்ளதாக நடிகர் விஷால் பெருமிதம் தெரிவித்தார். தென்னந்திய நடிகர் சங்கத்தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் பாண்டவர் அணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அந்த அணியை சேர்ந்த நடிகர்கள் நாசர், விஷால் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய விஷால், நடிகர் சங்கத்தேர்தலில் தாங்கள் மீண்டும் நிற்பதற்கு தாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதே காரணம் எனக்கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக சொன்னதைச் செய்துள்ளதாக கூறிய அவர், தேர்தல் நேர்மையானதாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் சங்கத்தலைவர் நாசர், எதிரணியாக போட்டியிடுபவர்கள் நேற்றுவரை தங்களுடன் ஒரே தட்டில் உண்டவர்கள் எனவும், தற்போது அவர்களுக்கு புது கருத்து தோன்றியதன் அடிப்படையில் எதிரணியில் நிற்பதாகவும் கூறினார். 

 

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT