நடிகர் சங்க தேர்தலை நடத்தும் அதிகாரி மீது பாக்யராஜ் அணியினர் சரமாரி புகார்

0 1271

நடிகர் சங்கத் தேர்தலை நடத்தும் அதிகாரி மீது நம்பிக்கை இல்லை என்று பாக்யராஜ் அணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி பத்மநாபனை சங்கரதாஸ் அணியினர் சந்தித்து விஷால் மீது புகார் அளித்தனர்.

தபால் வாக்குகளுக்கு வாக்குச்சீட்டுகள் அனுப்பும் பணி தற்போது தான் நடைபெற்று வரும் நிலையில், ஆயிரத்து 100 தபால் வாக்குகள் பதிவாகி விட்டதாக விஷால் கூறுவது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் தேர்தல் தொடர்பாக காவல் ஆணையரைச் சந்தித்து விஷால் பாதுகாப்பு கேட்பது எந்த வகையிலும் சரி இல்லாத செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

புகாரைக் கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT