அரசு குடியிருப்புகளில் அங்கீகாரமின்றி தங்கியிருப்பவர்களை வெளியேற்ற மசோதா ஒப்புதல்

0 273

அரசு குடியிருப்புகளில் அங்கீகாரமின்றி தங்கியிருப்பவர்களை வெளியேற்ற வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு குடியிருப்புகளில் உரிய அங்கீகாரம் இன்றி தங்கியிருப்பவர்களை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்புதல், காரண விளக்கம், விசாரணை உள்ளிட்ட நீண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், தகுதி உடையவர்களுக்கு குடியிருப்புகள் கிடைக்க நீண்ட தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொது வளாகங்கள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் 17 தொடங்கும் நடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகம்செய்யப்படவுள்ள இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அரசு குடியிருப்புகளில் அங்கீகாரமின்றி தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவது எளிமைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ((GFX OUT))

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT