வெப்ப சலனம் காரணமாக, 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

0 980

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும், புதுவையிலும் வரும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாகை, கடலூர், விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 2 சென்டிமீட்டர் மழையும் பேச்சிப்பாறை, குழித்துறையில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT