AN 32 விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை

0 2065

விபத்தில் சிக்கிய இந்திய விமானப் படையின் ஏ.என்.32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து கடந்த 3 ஆம் தேதி 13 அதிகாரிகளுடன் புறப்பட்ட ஏ.என். 32 ரக விமானம் திடீரென மாயமானது. செயற்கைகோள் உதவியுடன் தேடும் பணி நடைபெற்ற நிலையில் அந்த விமானம் அருணாச்சலப்பிரதேசத்தின் சியாங் மாவட்டத்திற்குட்பட்ட மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விமான பாகங்கள் விழுந்து கிடக்கும் இடம் அடர்ந்த காடு என்பதால் இந்திய விமானப்படையின் ஆய்வுக் குழுக்கள் அந்த இடத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை ஆய்வுக் குழுக்கள் அந்த இடத்தைச் சென்றடைந்தன.

விமான பாகங்கள் கிடக்கும் இடத்தின் சுற்றுவட்டரங்களில் எவரும் உயிர் பிழைத்து இருப்பதற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த ஜி.எம்.சார்லஸ், ஹெச்.வினோத், ஆர்.தாபா, ஏ.தன்வர், எஸ்.மொகந்தி, எம்.கே.கார்க், கே.கே.மிஸ்ரா, அனூப் குமார், ஷெரின், எஸ்.கே.சிங், பங்கஜ், புட்டாலி, ராஜேஷ்குமார் ஆகியோரின் குடும்பத்துக்கு இந்திய விமானப்படை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT