இதுவரை 107 உயிர்களை காப்பாற்றி அரிதான சாதனை

0 755

ஹைதராபாதில் தெருவில் அனாதையாகத் திரிந்த சிவா என்ற இளைஞர், குளங்கள், ஏரிகள், கடல் போன்ற இடங்களில் மூழ்க இருந்த 107 பேரைக் காப்பாற்றியுள்ளார்.

உயிரிழந்த பலரின் உடல்களை மீட்பதிலும் அடையாளம் காண்பதிலும் காவல்துறையினருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். தெருவோரத்தில் படுத்து உறங்கும் இவர், எட்டு வயதில் 30 ரூபாய் பணத்துக்காக இந்த தொழிலில் இறங்கியதாக தெரிவித்துள்ளார். ஆற்றில் மூழ்கிய தமது சகோதரரை 12 வயதில் காப்பாற்ற முடியாமல் போனதாக உருக்கத்துடன் தெரிவிக்கிறார்.

சிவாவின் எட்டுக் குழந்தைகள் படித்து முன்னேற அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT