சீனாவில் 8 மாகாணங்கள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு

0 352

சீனாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 49 பேர் உயிரிழந்தனர். தெற்குப் பகுதியில் உள்ள குவாங்ஸி ((Guangxi)) பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 


வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது.


மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் மாயமாகி உள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT