ஸ்பெயின் நாட்டில் பாராசூட்டில் பறக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன

0 112

ஸ்பெயின் நாட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பாராசூட் போட்டியின் போது வீரர் ஒருவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.

மலாகா என்ற இடத்தில் நடந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மஹியு மவ்ரிஸ் ((Mahieu Maurice)) என்பவர் மலை உச்சியிலிருந்து குதிக்கும் போது திடீரென காற்று திசைமாறியதால் சுற்றிச்சுழன்ற பாராசூட்டுடன் அவர் மலை முகடுகளிலும், பாறைகளிலும் மோதினார்.

இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT