பாஜக புதிய நிர்வாகக் குழு பெயர்கள் அறிவிப்பு

0 1581

பாஜக நாடாளுமன்றத்தின் பொறுப்புகளை வகிப்போரின் பெயர்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி, மக்களவையில் ஆளும் கட்சித் தலைவராக மோடியும், துணைத் தலைவராக ராஜ்நாத்சிங்கும் பதவி வகிப்பார்கள். முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லீக்கு பதிலாக, மாநிலங்களவை ஆளும் கட்சித் தலைவர் பதவியை மத்திய அமைச்சர் தாவார் சந்த் கெஹ்லோட் வகிக்க உள்ளார்.

மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், அர்ஜூன் முண்டா, நரேந்திர சிங் தோமர், ஜூவல் ஓரம் உள்ளிட்டோர் பாஜக ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றியமைக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகப் பொறுப்பாளர்களில் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோர் இடம் பெறவில்லை என்பதுடன் அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கும் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. புதிய நிர்வாகக் குழுவின் கூட்டம் வரும் 16ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT