தகுதியற்ற பேராசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் - யூ.ஜி.சி.

0 716

தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகங்கள் தங்கள் உறுப்புக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளன.

 பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற தேசிய தகுதித்தேர்வான NET அல்லது மாநில தகுதித்தேர்வான SET தேர்ச்சியோ, 2009-ஆம் ஆண்டில் M.Phil அல்லது Ph.D படிப்பை முடித்திருப்பதோ அவசியம்.

இந்த தகுதிகள் இல்லாமல் முதுகலை பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

அவற்றில் தகுதியற்ற பேராசிரியர்களை ஜூன் மாதத்திலேயே பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT