பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நீட்டிப்பு

0 222

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ/பி.டெக் மாணவர் சேர்க்கை, 46 சேவை மையங்களில் கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது இன்று நிறைவடைய இருந்த நிலையில், தரமணி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை ஆய்வுசெய்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனிடம், சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மேலும் ஒரு நாள் நீட்டிக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நாளை வரை மாணவர்களின் சான்றிதழ் பரிபார்ப்பு பணி நடைபெறும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT