தமிழகத்தில் 2381 அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்

0 942

தமிழகம் முழுவதும் உள்ள 2381 அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 3 நாட்கள் சிறப்புப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, அங்கன்வாடிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில், சிறப்பு மழலையர் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மைக் கருத்தாளர்கள் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT