இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி

0 459

கோவையில் நடைபெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்கச்சேரியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.

அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா மைதானத்தில் “ராஜாதி ராஜா” என்ற தலைப்பில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பின்னணி பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், மனோ, உஷா உதூப் உள்ளிட்ட பலர் பங்கேற்று பாடினர். நிகழ்ச்சியில் ஹங்கேரி நாட்டு இசைக்கலைஞர்களின் இசை பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தாக அமைந்தது.

நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT