விராட் கோலிக்கு ஆசி வழங்க விமானத்தில் பயணிக்கும் பள்ளி மைதான மண்

0 1159

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் விராட் கோலியை ஆசிர்வதிக்க அவர் விளையாண்ட பள்ளி மைதானத்தில் இருந்து மண் எடுத்து லண்டனுக்கு அனுப்பப்படும் நிலையில், அந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள விஷால் பாரதி பப்ளிக் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை பயின்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக லண்டனில் உள்ளார்.

அவர் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடிய மைதானத்தின் மண்ணை அப்பள்ளி சார்பில் சேமித்து விமானம் மூலம் லண்டனுக்கு அனுப்பிவைக்கவுள்ளனர். தாய் மண்ணின் ஆசி எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு பாராட்டப்பட்டாலும் சிலர் அதை கேலிக்கு ஆளாக்கி வருகின்றனர். அடுத்ததாக பசுவின் சிறுநீரையும் ஆசிக்காக விமானத்தில் விராட் கோலிக்கு அனுப்பிவைக்குமாறு சிலர் கேலி செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT