இரண்டு வேடங்களில் விஜய்..!

0 5431

மூன்றாவது முறையாக:

தெறி, மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லியுடன் இணைந்துள்ளார் நடிகர் விஜய். விஜய் 63 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். உடன் கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் - விவேக் இணைந்து நடிக்கும் 13வது திரைப்படம் இது என்பது குறிப்பிடதக்கது.

First Look போஸ்டர்:

படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, விஜயின் பிறந்த தினமான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கதையம்சம்:

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார். ஏர்.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இரு வேடங்கள்:

இந்த படத்தை பற்றி புதியதொரு தகவல் வெளியாகியுள்ளது. விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். தந்தை - மகன் என இரண்டு வேடங்களில் தோன்றுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, அழகிய தமிழ் மகன், கத்தி படங்களில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ஒரே காட்சியில் தந்தை மகன்:

இந்த படத்தில் தந்தை விஜய் மற்றும் மகன் விஜய் ஒரே காட்சியில் தோன்றுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு முன்பாக மெர்சல் படத்தில் தந்தை மற்றும் மகன் என மெர்சல் படத்தில் தோன்றியிருந்தாலும் ஒரே காட்சியில் இடம் பெறுவது போன்று காட்சிகள் அமைக்கப்படவில்லை. ஆனால், இந்த படத்தில் தந்தை விஜய் மற்றும் மகன் விஜய் ஒன்றாக தோன்றுவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT