தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு தடை

0 1275

தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க  நடவடிக்கை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆணையிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. அதில் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டாலும், அந்த தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்து கொள்ளமுடியாது. இதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டதால் அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மேல்முறையீட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய விடுமுறைக் கால சிறப்பு அமர்வு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஆணையிட்டனர்.

வரும் ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்றும், அதுவரை அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT