தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

0 606

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில் நெசவாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் தறி நெய்யும் பணியில் ஈடுபட்டார்

இதனைத் தொடர்ந்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் நெசவாளர்கள் மத்தியில் பேசியபோது சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் தெரிவித்து பேச்சைத் தொடங்கினார். 

பெருவாரியான ஊராட்சிகளுக்குச் சென்ற ஒரே தலைவன் தான் தான் என்று தெரிவித்த அவர், வெறும் தேர்தலுக்கு வந்தார், வாக்குறுதிகள்  தந்தார் என்ற போக்கில் இல்லாமல் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற வகையில் தி.மு.க.வின் செயல்பாடுகள் அமையும் என்று தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
Save my name, email, and website in this browser for the next time I comment.
SUBMIT