பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவித்தபடி வெளியாகும்

0 466

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 29ம் தேதி குறித்த நேரத்தில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அரசு தேர்வுகள் துறை இயக்குநர், 29ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பின், மே 2ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படுபவர்கள் மே 6ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 2 முதல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் 22 வரை சிறப்பு துணைப்பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT