நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு

0 817

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் அவரை சரத்குமார் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆதரவு அளிக்கக் கேட்டுக்கொண்டதையடுத்து தனித்துபோட்டி என்பதை மாற்றி அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து ஒப்புதல் கடிதம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் தேர்தலில் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT