RECENT NEWS

சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி.. இயந்திரத்தை உடைக்க முடியாததால் விட்டுச் சென்ற கொள்ளையன்

BIG STORIES

ரூ.4,000 கோடி அரண்மனை.. 560 கிலோ தங்கம்.. காய்கறி வியாபாரம் செய்யும் யார் இந்த ‘ஆச்சர்யர்?’

Apr 08, 2025 07:59 AM

927

ரூ.4,000 கோடி அரண்மனை.. 560 கிலோ தங்கம்.. காய்கறி வியாபாரம் செய்யும் யார் இந்த ‘ஆச்சர்யர்?’

நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டாலும் இன்னும்கூட ‘நாங்க ராஜ பரம்பரை... மன்னர் பரம்பரை’ என மன்னர்களும் இளவரசர்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’, பிரபு சாலமனின் ‘கயல்’ என பல படங்களில் மன்னர் பரம்பரையினர் குறித்து நகைச்சுவையாகவும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு, எந்த அதிகாரமும் இல்லை என்றாலும் கெளரவத்திற்காக அந்த பதவியில் இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியாவும் அரச பரம்பரையில் வந்தவர் எனக் கூறப்படுகிறது.

அதாவது, அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்தார். ஆனால், ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.கவில் இணைந்தும் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.

இவரது மகன் மகா ஆர்யமான் சிந்தியா தனது தந்தைக்கு 13 வயதிலிருந்தே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார். குவாலியர் இளவரசாக பார்க்கப்படும், மகா ஆர்யமான் சிந்தியா 150 ஆண்டுகள் பழமையான ஜெய் விலாஸ் அரண்மனையில் வசித்து வருகிறார்.

1874 ஆம் ஆண்டு இந்த அரண்மனை 1 கோடி ரூபாயில் கட்டப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இதில், 400 அறைகள் உள்ளன. ஆனால், அரண்மனையின் இன்றைய மதிப்பு 4,000 கோடி ரூபாயாகும்.

அரண்மனையின் உள்பகுதி 560 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி, தங்கத்தைக் கொண்டு அரண்மனையின் உள் பகுதியை அலங்கரிக்க 12 ஆண்டுகள் ஆனதாகவும் அதற்கு அப்போது 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் வியக்கப்படுகிறது.

அரண்மனையின் இருக்கும் தர்பார் ஹாலின் மையப்பகுதியில் இருக்கும் அலங்கார விளக்கு மிகவும் பிரபலமானது. இது, உலகத்திலேயே மிகப்பெரிய விளக்கு என பிரமிக்கப்படுகிறது.

இந்த விளக்கைப் பார்ப்பதற்காகவே பலரும் வந்து செல்கின்றனர். அரண்மனை சாப்பாட்டு அறை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாப்பாடுகளை எடுத்துச்செல்ல, ஒரு மினி ரயிலே வலம் வருகிறது என மேலும் ஆச்சர்யமூட்டுகிறார்கள். இந்த அளவுக்கு ஆடம்பரமான பங்களாவில் வாழ்ந்தாலும் இளவரசர் மகா ஆர்யமான் சிந்தியா, ஆப் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்துவருகிறார்.

அரசு குடும்பத்தில் பிறந்துவிட்டு காய்கறி வியாபாரம் செய்கிறீர்களே? என உசுப்பேற்றி உடம்பை ரணகளமாக்கினாலும் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது காய் கனி விற்பனையை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறார், மகா ஆர்யமான் சிந்தியா. ‘மைமண்டி’ என தொடங்கியிருக்கும் அவரது மொபைல் செயலிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகளிடம் இவர் தொடர்பு வைத்துக்கொண்டு நேரடியாக காய்கறிகளை விலைக்கு வாங்கி, 5 நகரங்களில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். இவரது, செயல்பாடுகளைப் பார்த்து ரத்தன் டாடாவே அவரது கம்பெனியில் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மன்னர் பரம்பரை என சொல்லிக்கொண்டு திரியாமல், ‘எந்த தொழில் செய்தால் என்ன, செய்யும் தொழில் தெய்வம் என்று, பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னாரே...ரிப்பீட்டு” என கலக்கிக்கொண்டிருக்கிறார், மகாஆர்யமான் சிந்தியா.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை - த.வெ.க தலைவர் விஜய் பேச்சு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies