போலீஸ் வந்தபிறகே POSH குழுவில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிந்தது - அமைச்சர்.. காவல் ஆணையர் தகவலுக்கு முரணான அமைச்சர் விளக்கம் என புகார்
போலீஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும்போதுதான், POSH குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தெரிய வந்தது என தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் உள்ள உள்விசாரணைக் குழு எனப்படும் POSH கமிட்டியில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவி பலாத்கார சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் ஆணையர் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனால் மாணவி POSH கமிட்டியிடம் புகார் ஏதும் அளிக்கவில்லை என அமைச்சர் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், POSH குழுவில் உள்ள ஒரு பேராசிரியரின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் நடந்த விவரங்களைச் சொல்லி புகார் அளித்ததாகவும், காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணை செய்யும்போதுதான், இந்தச் சம்பவம் தொடர்பாக மற்றவர்களுக்கு தெரியவந்ததாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
அதை வைத்துதான் POSH குழுவில் நேரடியாகப் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்ததாக அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Comments